25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


இகுவானா எனும் பல்லி இன  ஓணான்கள், 
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இகுவானா எனும் பல்லி இன  ஓணான்கள், 

வட அமெரிக்கக் கண்டத்தின் தென் பகுதியிலும், தென் அமெரிக்க கண்டத்தின் வட பகுதியிலும், கரபியன் தீவுகளிலும் இகுவானா எனும் பல்லி இன ஓணான்கள், வாழ்கின்றன. இந்த இனத்தைச் சேர்ந்த ஒரு குறிப்பிட்ட வகை பல்லி மட்டும் பிஜி தீவுகளில் காணப் படுகிறது.இந்தத் தீவு ஆஸ்திரேலிய கண்டத்திற்கும் தென் அமெரிக்கா வுக்கும் இடையே நடுக்கடலில் தனித்து இருக்கிறது. இவ்வளவு தொலைவில், கடலால் சூழப்பட் டிருக்கும் தீவிற்கு இந்த ஓணான்கள் எப்படி வந்தன என்பது விஞ்ஞானிகளே ஆச்சரியப்படுகின்றனர்.

இவை, தென் அமெரிக்காவிலி ருந்து கடல் வழியே நீந்தி இந்தத் தீவுகளை அடைந்திருக்க வேண் டும் என்று சில விஞ்ஞானிகள் இதுவரை எண்ணி இருந்தனர். ஆனால், சமீபத்திய கலிபோர் னியா பல்கலை ஆய்வு வேறு ஓர் ஆச்சரியமான தகவலைத் தந்துள்ளது.அதாவது மரபணு ரீதியாக பிஜி தீவுகளில் வாழும் ஓணான்கள் தென் அமெரிக்க ஓணான்களோடு தொடர்புடையவை அல்ல. மாறாக அமெரிக்காவில் வாழ்பவையோடு  தொடர்புடையவை. எனவே இவை வட அமெரிக்காவில் இருந்து, குறிப்பாக கலிபோர்னியா  முதலிய மாகாணங்களில் இருந்து  கடல் வழியே நீந்தி இந்தத் தீவுகளை அடைந்திருக்க வேண்டும் என்று  விஞ்ஞானிகள்.  கூறுகின்றனர்.

இதில் ஆச்சரியப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் இவை கிட்டத்தட்ட8,000 கிலோ மீட்டர் தூரத்தை நீந்திக் கடந்து இந்தத் தீவை அடைந்துள்ளன. இவ்வளவு தொலைவைக் கடலில் நீந்திக் கடக்கும் தன்மையுள்ள, முதுகெலும்புள்ள ஒரே நிலவாழ் உயிரினம் இந்த இகுவானா ஓணான் தான்.பொதுவாகவே இவற்றால் நீண்ட காலம் உணவு, தண்ணீர் இல்லாமல் வாழ முடியும். இந்த திறன் தான் இவ்வளவு தூரத்தை கடந்து வருவதற்கு உதவி இருக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News